மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BREAKING: அடுத்த 2 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கடலூர், அரியலூர் உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை அறிவிக்கப்பட்டுள்ள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 2 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.