திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#GoodNews: 23 மாவட்டங்களில் வெளுத்துவாங்கபோகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிககனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 22 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
23 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி - மின்னலுடன் கூடிய லேசான மலை முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புடாலூர், சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை பகுதிகளில் 17 சென்டிமீட்டர் மழையும், சேலம் எடப்பாடியில் 15 சென்டிமீட்டர் மழையும், நாமக்கல் ராசிபுரம், கிருஷ்ணகிரியில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 22 ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை குமரிக்கடல்பகுதி, தென் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதி, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.