அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன?.. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!



  Chennai RMC Announcement 16 July 2023 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசம் பதிவாகலாம். 

tamilnadu

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில் இன்று தென் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள குமரி கடல், தெற்கு இலங்கை கடலோர பகுதி, அந்தமான் கடலோர பகுதி, லட்சத்தீவு, வடக்கு கேரளா-கர்நாடக கடலோர பகுதி, அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.