திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
JustIN: அடுத்த 3 மணிநேரத்தில் 16 மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 16 மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் & தெற்கு அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், குமரிக்கடலில் இருந்து கேரளா வரை நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழகத்தில் 5 நாட்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களாக தொடர் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழகத்தின் 16 மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.