திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காற்று மாறுபட்டால் கருணை காட்டும் வருண பகவான் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 & 21 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமற்றத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மலை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 17 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மத்திய அரபிக் கடல், கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசும் என்பதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.