திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்று தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் எவை?.. லிஸ்ட் இதோ.. மக்களே குளுகுளு சூழலுக்கு தயாராகுங்க.!
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி "தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு கிழக்கு திசை காற்று, மேற்கு திசைக்காற்று சந்திக்கும் பகுதியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தில் ஒருசில இடஙக்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். தமிழ்நாட்டில் 7 அல்லது 8ம் தேதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.