திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Hot Weather: அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்தெடுக்கப்போகும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வறண்ட வானிலை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாக எச்சரிக்கைக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் விரைவில் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் என்பது கடுமையாக அதிகரித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"12 ம் தேதி முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். 12ம் தேதி மற்றும் 13ம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் வெப்பம் அதிகபட்சமாக ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.