திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தீபாவளி திருநாளில் வெறிச்சோடி காணப்படும் சென்னை சாலைகள்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பல பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதாவது சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. போக்குவரத்து அதிகம் காணப்படும் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் வாகனங்கள் எதும் செல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதேபோல் விமான நிலையத்திலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி, புனே, கொழும்பு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் மேலும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.