ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிறுவயதில் இருந்து தீராத உடல்நல பிரச்சனை.. பெண்ணின் விபரீத முடிவால், தாயை தேடும் பச்சிளம் பிஞ்சுகள்.!
சென்னையில் உள்ள இராயப்பேட்டை முத்தையா தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் ஆன்லைன் மூலமாக உணவுகளை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக உமா மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
சிறுவயதில் இருந்து உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுடன் அவர் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே உச்சகட்ட மன விரக்தியுடன் காணப்பட்டு வந்துள்ளார். மேலும், மன வருத்தத்தையும் அக்கம் பக்கத்தினரிடம் வெளிப்படுத்தி வந்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி லாயிட்ஸ் காலனியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றிருந்த உமா மகேஸ்வரி அங்கேயே இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உமா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர், உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.