திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என் காதலி விட்டு போயிட்டா.. லேப்டாப் திருடனா மாறினேன் - திருட்டுப்பயலின் வினோத வாக்குமூலம்.! சென்னையில் பகீர்..!
காதல் தோல்வியடைந்ததால் மருத்துவக்கல்லூரிகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட திருட்டு லேப்டாப்கள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மருத்துவ கல்லூரி மாணவர் ருத்ரேஷ். இவர் உட்பட பிற 2 மாணவர்களின் லேப்டாப்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்ம நபரால் திருடப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அந்த வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மர்ம நபர் லேப்டாப்பை திருடி சென்றது உறுதியாகவே, தனிப்படை காவல் துறையினர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 25) என்பவரை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலேயே கைது செய்தனர்.
இவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், தாய் - தந்தையை இழந்து வாழ்ந்து வந்த தமிழ்செல்வன், டெல்லியில் உள்ள பல்கலை.,யில் பி.ஏ பொருளாதாரம் பயின்றுள்ளார். தொலைதூர கல்வி மூலமாக பி.எல் பயின்று வருகிறார். கடந்த சில வருடத்திற்கு முன்னதாக மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலானது அவருக்கு தோல்வியை ஏற்படுத்தவே, அந்த ஆத்திரத்தில் தமிழ்செல்வன் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் பட்டியலை தேர்ந்தெடுத்து, நாள்குறித்து கல்லூரி விடுதிக்கு சென்று தலா 2 லேப்டாப் வீதம் திருடி விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இதனையடுத்து, அவர் தங்கியிருந்த செம்மஞ்சேரி வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், 31 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வந்தது.