மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்கிட்ட 2 அழகி இருக்காங்க, ஜாலியா இருக்கலாம் வாங்க; எஸ்.ஐ-யை விபச்சாரத்திற்கு அழைத்த வாலிபர்..!
சென்னையில் உள்ள சாலிகிராமம் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் இளவழுதி தலைமையிலான அதிகாரிகள், எஸ்.பி.ஐ காலனி பகுதியில் மாற்று சீருடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வாலிபர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரிடம் யாருக்காக நிற்கிறீர்கள்? என பேச்சுக்கொடுத்துள்ளார். பின் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னிடம் 2 அழகிகள் இருப்பதாகவும், ரூ.5 ஆயிரம் தான் கட்டணம் எனவும் கூறியுள்ளார்.
ஆவலோடு அழகிகளை பார்க்க வேண்டும் என்பதை போல அதிகாரி பாவனை செய்ய, அதனை நம்பிய வாலிபரும் பின்னணி தெரியாமல் அதிகாரியை அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றார். அங்கு பின்தொடர்ந்து வந்த அதிகாரிகள் வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 2 அழகிகள் மீட்கப்பட்டனர். விசாரணையில், அழகிகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்தது சரவணன் என்பது உறுதியாகவே, அவரை அதிகாரிகள் கைது செய்தனர். பெண்கள் மீட்கப்பட்டு மயிலாப்பூரில் இருக்கும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.