மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருசக்கர வாகனத்தில் லாரி மோதி பயங்கர விபத்து.. கணவன் கண்முன்னே துடிதுடிக்க உயிரிழந்த மனைவி.!
சென்னையில் உள்ள சோழவரம், புதூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் குமார். இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இவரின் மனைவி சுதா (வயது 28). இவர்கள் இருவரும், நேற்று இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருக்கும் கண் மருத்துவமனைக்கு வந்து, பின்னர் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, செங்குன்றம் - பாடியநல்லூர் சாலைச்சந்திப்பில் வருகையில், செங்குன்றத்தில் இருந்து சோழவரம் நோக்கி சென்ற லாரி தம்பதியின் இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சுதா, தனது கணவரின் கண்முன்னே துடிதுடிக்க உயிரிழந்தார். மேலும், குமார் லேசான காயத்துடன் உயிர்பிழைத்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாதவரம் காவல் துறையினர், லாரி ஓட்டுநர் சீனிவாசனை (வயது 50) கைது செய்தனர்.