திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை புறநகர் இரயில்களில் பயணிகளிடம் கத்திமுனையில் வழிப்பறி.. இரவு நேரத்தில் அட்டகாசம்.!
சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் இரயில்களில் இரவு நேர பயணிகளை குறிவைத்து கும்பலொன்று கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபடுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார இரயில் அதிகாலை 03:55 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை இயக்கப்பட்டு வருகின்றன. இரவில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான கடைசி இரயில் 11:59 மணியுடன் தனது சேவையை நிறைவு செய்கிறது. நள்ளிரவு 1 மணியளவில் எதிர்முனையில் பயணிக்கும் இரயில்கள் கடற்கரை மற்றும் தாம்பரத்தை சென்றடைகிறது.
இதனால் இரவு நேர பணிகளை முடித்துவிட்டு வரும் நபர்கள், 11 மணிக்கு மேலாக இயக்கப்படும் புறநகர் இரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வெளியூரில் இருந்து வரும் நபர்களும் புறநகர் மின்சார இரயில்களில் பயணம் செய்கின்றனர். இதனால் பகல் வேளையை போல இரவில் கூட்டம் அதிகளவு இருப்பதில்லை. குறைந்தளவு பயணிகளே இரயிலில் பயணம் செய்வார்கள்.
இந்த விஷயத்தை தனக்கு சாதகமாகும் சமூக விரோத கும்பல், இரயில் பயணிகளிடம் கத்திய காண்பித்து மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து வருகிறது. ஒன்று மற்றும் இரண்டு பயணிகள் உள்ள பெட்டிகளை குறிவைக்கும் 4 பேர் கும்பல், அடுத்த இரயில் நிலையம் வரும் சில நொடிகளுக்கு முன்னர் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபடுவது நடக்கிறது.
இதனால் இரவு நேர இரயில் பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் இறுதி இரயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் இரயில்வே பாதுகாப்பு சேவைக்கு தொடர்பு கொண்டாலும், அழைப்பை யாரும் எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.