திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
4 கணவர்களை ஏமாற்றி 2ம் கணவருடன் உல்லாசம், உற்சாகம்.. காதலில் மோசடி செய்து சம்பாதித்த காதல் ராணியின் பரபரப்பு வாக்குமூலம்.!
28 வயது பெண்மணி 25 வந்து வாலிபரை திருமணம் செய்து பணம், நகை ஏமாற்றி சென்ற விவகாரத்தில் விசாரணையில் பல பரபரப்பு தகவல் அம்பலமாகியுள்ளது. 18 வயதில் நடந்த திருமணத்தால் தடம்மாறிப்போன பெண்ணின் வாழ்க்கை சிறையில் கம்பியெண்ணப்போகும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 25). இவர் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். முடிச்சூர் சாலையில் செயல்பட்டு வந்த பேக்கரியில் பணியாற்றி வந்த பெண்மணி அபிநயா (வயது 28). இவர்கள் இருவரும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர். அந்த சமயத்தில், அபிநயா தனது பெற்றோருருடன் நான் தகராறு செய்து வந்துவிட்டேன், தனியாக விடுதியில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதியில் ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் வைத்து நடராஜன் - அபிநயாவுக்கு நடராஜனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தை தொடர்ந்து இருவரும் தனித்தனியே நகைக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர்.
வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து அபிநயா வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த அக். மாதம் 19ம் தேதி அவர் மாயமாகினார். அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. வீட்டில் இருந்த பட்டுப்புடவை, 17 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கமும் மாயமாகி இருந்தது.
உண்மையை அறிந்த நடராஜன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் அபிநயாவின் ஆதார் அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் மதுரை தெற்கு அரிசிக்காரத்தெருவை காண்பித்துள்ளது. இதற்கிடையில், அவர் செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர் சாலையில் இருக்கும் விடுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அபிநயாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 சவரன் நகைகளும் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர், 8 வயதுடைய மகன் இருப்பது உறுதியானது. தீவிர விசாரணையில் அபிநயா நடராஜனை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து ஒன்றரை மாதம் கழித்து நகை, பணத்துடன் எஸ்கேப் ஆனது உறுதியானது.
அபிநயா மொத்தமாக 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள நிலையில், கடந்த 2011ல் மன்னார்குடியை சேர்ந்தவருடன் முதல் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 10 நாட்களுக்கு அவரை பிரிந்து வந்த அபிநயா, மதுரையை சேர்ந்த செந்தில் குமாரை திருமணம் செய்துள்ளார்.
அபிநயாவுக்கும் - செந்தில் குமாருக்கும் மகன் பிறந்துள்ளார். அந்த குழந்தைக்கே தற்போது 8 வயது ஆகிறது. ஒருகட்டத்தில் செந்தில் குமாரை பிரிந்த அபிநயா, கேளம்பாக்கத்தில் வசித்து வந்த வாலிபரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அவரையும் 10 நாட்களில் உத்தரவிட்டு, ஊரப்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடராஜனை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
இவர் வேலைக்காக ஒவ்வொரு பணியிடத்திற்கு செல்லும்போதும், அங்கு சிக்கும் வாலிபர்களை குறிவைத்து திருமண ஆசை காண்பித்து மோசடி செய்தது அம்பலமானது. அவர்களிடம் திருடும் பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கையையும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த விசயத்திற்கு செந்தில் குமாரும் உடந்தையாக இருக்க, இருவரும் இன்பமாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து, இறுதியாக செந்தில் குமாரும் கைது செய்யபட்டர். இவர்களிடம் இருந்து 32 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. தம்பதிகள் கூட்டாக சேர்ந்து யார் யாரை? ஏமாற்றினார்கள் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.