திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தலைநகரில் திடீர் துப்பாக்கிச்சத்தம்; வழக்கறிஞரின் தலை தப்பியது.! உச்சகட்ட அலர்டில் சென்னை..!
சென்னையில் உள்ள தாம்பரம், மீனாம்பாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன். இவர் தனது மனைவி பிரியா மற்றும் மகன் விஷால் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இன்று இரவு திடீரென இவர்களின் வீட்டில் துப்பாக்கிச்சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் வீட்டில் இருந்து வெளியி வருவதற்குள், மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து இருக்கிறார்.
இதுகுறித்து தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நேரடியாக வழக்கறிஞரின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பியோடிய நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட தியாகராஜன் வழக்கறிஞர் என்பதால், குற்றவழக்கில் தொடர்புடையோர் எதிர் விசாரணை காரணமாக கொலை சம்பவத்தில் ஈடுபட துப்பாக்கி சூடு நடத்தினரா? வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.