திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடுபுகுந்து நள்ளிரவில் திருட்டு; ஜோடியாக கத்திய கிளிகளை கொன்ற திருடன்.. சென்னையில் பகீர்.!
சென்னையில் உள்ள தாம்பரம் புதிய பெருங்களத்தூர், கட்டபொம்மன் தெரு பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். இவர் தனது மனைவி மற்றும் தாயார் அள்ளியோடு ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கணேஷ் மற்றும் அவரின் தாயார் தனித்தனி படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அள்ளி கழிவறைக்கு செல்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்து கதவை திறக்கும் போது கதவு திறக்கப்படவில்லை. இதனால் பக்கத்து அறையில் உறங்கிய மகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியே வர முயற்சித்தும் பலனில்லை. இதனால் பதறிப்போன கணேஷ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கீழ் தளத்தில் வாடகைக்கு இருப்பவரின் உதவியை நாடியுள்ளனர்.
கழிவறையில் ஜன்னல் கம்பிகள் இல்லாததால் அதன் வழியே திருடன் வந்து அறைகளின் கதவை தாளிட்டு திருட்டு செயலில் ஈடுபட்டது உறுதியானதால், அதே வழியில் கீழ்தளத்தில் இருந்த ஒல்லியான தேகம் உடைய இளைஞரை உள்ளே அனுப்பி கதவை திறக்க வைத்தனர்.
கதவு திறக்கப்பட்டதும் வெளியே வந்த தாய், மகனுக்கு பெரும் அதிர்ச்சியாக அவர்கள் வளர்த்து வந்த ஜோடிக்கிளி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம், பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள் ஆகியவை திருடப்பட்டன.