திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெண்களின் உள்ளாடை மீது ஈர்ப்பு; இரவு நேர ஆடை கொள்ளையன் கைது.!
சென்னையில் உள்ள தாம்பரம், சேலையூரில் இளம்பெண்களின் உள்ளாடை அடிக்கடி திருடுபோய் வந்தது. மேலும், இரவு நேரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு, தனியே வரும் பெண்களை குறிவைத்து, மர்ம நபர் பாலியல் தொல்லையும் அளித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடந்த விசாரணையில், தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் தமிழ் பிரபு (வயது 28) கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவருக்கு சிறுவயதில் இருந்து பெண்களின் உள்ளாடை மீது இருந்த ஈர்ப்பு காரணமாக, அவர்களின் உள்ளாடையை திருடி சுயஇன்பம் அடைவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.