மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவ படிப்புக்காக 4 ஆண்டுகள் செலவழித்து, வழியின்றி ஐ.பி.எஸ் ஆனேன் - பிளாஷ் பேக்கில் குட்டி கதையை பகிர்ந்த சைலேந்திர பாபு.!
தான் மருத்துவம் பயில இயலாமல் போனது குறித்து முதன் முறையாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் மனம்திறந்து பேசியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., "எனக்கு மருத்துவத்துறை என்றால் மிகவும் பிடிக்கும். நான் மருத்துவராக வேண்டும் என்று முதலில் ஆசைப்பட்டேன். அப்போது, எண்ட்ரன்ஸ் எக்ஸாம், இன்டெர்வியு என்பவை இருக்கும் காலம் ஆகும்.
நான் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுத்தேன். படிப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்தேன். இறுதியில் இன்டெர்வியூ நன்றாக செய்யவில்லை என்பதால் மருத்துவ துறையில் படிக்க இடம் கிடைக்கவில்லை. எனக்கு இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்கச் இயலவில்லை. பின்னர் அகிற்கலசர் கல்லூரியில் சேர்ந்தேன்.
எப்படியாவது மருத்துவம் பயிலலாம் என்று ஆசை இருந்ததால், மருத்துவத்திற்கு ரீ எக்ஸாம் எழுதினேன். அதில் தேர்ச்சி அடைந்திருந்தபோது, எங்களுக்கு முட்டுக்கட்டையாக முந்தைய படிப்பு இருந்தது. பி.யூ.சி படித்தவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடமில்லை என 4 ஆண்டுகள் பல முயற்சிகள் மேற்கொண்டு அனைத்தும் தோல்வியை அடைந்தது.
ஆனால், நீங்கள் மருத்துவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது நீங்கள் லக்கியானவர்கள் என்பதை உறுதி செய்கிறது. மருத்துவ துறையிலும் பல சவால்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு நீங்கள் வெற்றியடைய வேண்டும். சமூகத்திற்கு உண்மையான மருத்துவம் & போலி மருத்துவத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. அதனை நீங்கள் சரி செய்யுங்கள்" என்று பேசினார்.