#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் இரயில் முன் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை..! தலைதுண்டித்து மரணம்.. ஒருதலைக்காதலால் பயங்கரம்..!
கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்த மாணவி ஒருதலைக்காதலனால் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்மணி சத்யா (வயது 20). இவர் இன்று கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவன் சத்யாவிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளான்.
அந்த சமயத்தில், அவ்வழியே மெரினா கடற்கரை நோக்கி பயணம் செய்த இரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்ட சதீஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். இந்த சம்பவத்தில் சத்யா தலை துண்டிக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ந்துபோயினர்.
பின்னர் இதுகுறித்து மாம்பழம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், மேற்கூறிய சதீஷ் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான் என்பது அம்பலமானது.
அவனது காதல் தொல்லை தாங்காத பெண் வீட்டார் ஏற்கனவே அவனின் மீது புகார் அளித்து, காவல் நிலையத்தில் எச்சரித்து எழுதிவாங்கியுள்ளனர். அவனின் தந்தை ஓய்வுபெற்ற காவலர் ஆவார். இளைஞனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.