திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாய்பாபா பெயரைச்சொல்லி இப்படியும் ஏமாற்று வேலை; 2 கேடி ஜோடிகள் அதிரடி கைது.!
சென்னையில் உள்ள கே.கே.நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்நாத் (வயது 54). இவர் தீவிர சாய்பாபா பக்தர். வீட்டில் மாதந்தோறும் சாய்பாபா பூஜையும் நடத்தி வந்துள்ளார். இதனால் பல சாய்பாபா பக்தர்கள் அவரின் வீட்டிற்கு வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் இவர் சாய்பாபா கோவிலில் வைத்து கே.கே.நகரில் உள்ள சபரிநாதன் (வயது 40), ராதா என்ற சுப்புலட்சுமி (வயது 43) ஆகியோரை சந்தித்து இருக்கிறார். அவர்கள் தங்களை தீவிர சாய்பாபா பக்தர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு மோகன்ராஜ் வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.
பின் சாமி அருள் வந்து குறிசொல்வது போல சபரிநாதன் நடித்த நிலையில், மோகனின் உறவினர்கள் அவருக்கு செய்வினை வைத்திருப்பதாகவும் இதனால் பல கஷ்டங்களை அவர் சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும் பரிகாரம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில், பூஜையில் தங்கநகைகளை வைத்து பூஜை செய்ய கூறியுள்ளார்.
அதனை ஏற்று 15 சவரன் தங்க நகைகளை அவர் கொடுத்த நிலையில், பூஜைக்கான செலவாக கொஞ்சம் கொஞ்சமாக ரூ.3 லட்சம் பணமும் பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சபரிநாதன் மற்றும் அவரின் தோழியான ராதா இருவரும் 15 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகினர்.
இதனையடுத்து எமாற்றபட்டதை உணர்ந்த மோகன் தனது பணத்தை மீட்டுத்தர கோரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் சபரிநாதன், ராதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இருவர்களிடமிருந்து 9 சவரன் நகைகள், ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை மீட்கப்பட்டுள்ளது.