மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் தம்பியை கிண்டல் செய்து அடிக்கிறியா?.. சதக், சதக்.. ஐயோ என சத்தம்.. நடுரோட்டில் பயங்கரம்.!
சகோதரனை கிண்டல் செய்த நபரை அண்ணன் - தம்பி ஒன்றாக சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவான்மியூர் இரங்கநாதபுரம், ஏரிக்கரை பகுதியை சார்ந்தவர் விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 33). இவர் தோட்ட வேலைகளை செய்து வந்த நிலையில், திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை நேரத்தில் விக்னேஸ்வரன் திருவான்மியூர் சிக்னல் அருகேயுள்ள எல்.பி சாலையில் சென்றுகொண்டு இருந்தார்.
இதன்போது, அங்கு வந்த 2 பேர் கும்பல், விக்னேஷை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விக்னேஸ்வரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். நடுரோட்டில் நடந்த பரபரப்பு கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கொலை நிகழ்வை அரங்கேற்றிய 2 குற்றவாளிகளும் தப்பி சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொலையில், விக்னேஸ்வரனின் மீது அடிதடி வழக்குகள் உள்ளதால், முன்பகையில் கொலை நடந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
திருவான்மியூர் காவல் துறையினர் கொலையாளிகளுக்கு வலைவீசியிருந்த நிலையில், குற்றவாளியில் ஒருவரான கோபி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது தம்பி அஜித் (வயது 25), நண்பர்கள் சூர்யா (வயது 26), விக்கி (வயது 21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விக்னேஸ்வரன் கோபியின் சகோதரர் அஜித்தை அவ்வப்போது கிண்டல், கேலி செய்து அடித்து உதைத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட கோபியையும் தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கோபி மற்றும் அஜித் விக்னேஸ்வரனை கொலை செய்துள்ளனர்.