திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணனின் கடனுக்கு தம்பியை கடத்திய கும்பல்; சினிமா பாணியில் இசைக்கச்சேரி கலைஞருக்கு சென்னையில் நடந்த பயங்கரம்.!
மதுரையை பூர்வீகமாக கொண்டவர் தேவ் ஆனந்த் (வயது 29). இவர் ராப் இசைக்கலைஞர் ஆவார். நண்பர்களுடன் இசைக்கச்சேரி குழு நடத்துகிறார். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று இசைக்கச்சேரி நடந்தது. பின், தனது குழுவுடன் திருவேற்காட்டில் உள்ள வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.
திருவேற்காடு பகுதி முன்பு செல்கையில் காருக்கு பின்னால் இருசக்கர வாகனம் மோதி இருக்கிறது. இதனால் காரை நிறுத்திய தேவ் ஆனந்த், சேதம் குறித்து இறங்கி பார்த்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் ஆனந்த் தேவ்-வை சுற்றி வளைத்துள்ளது.
அந்த கும்பலை சேர்ந்தவர் உன் அண்ணன் பணம் தர வேண்டும் என்பதால், அதனை நீ தா என்று கத்தியை காண்பித்து மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளது. அவருடன் வந்தவர்கள் நண்பர் கடத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த திருவேற்காடு காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையில், தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் ஏலசீட்டு நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக தெரியவருகிறது.
இதனால் பணத்தை இழந்தவர்கள் சிரஞ்சீவியை தேடிவர, அவர்களின் கண்ணில் தேவ் ஆனந்த் சிக்கியுள்ளார். கடத்தல் கும்பலை அதிரடியாக தேடி வந்த காவல் துறையினர், இசைக்குழுவை சேர்ந்த தேவ் ஆனந்தை தேடி வருகின்றனர். கடத்தல் கும்பலுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.