மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#தமிழகமே அதிர்ச்சி: காதல் பிரச்சனையில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை?.. திருவேற்காட்டில் பதற்றம்., காவல்துறை குவிப்பு.!
சென்னையில் உள்ள திருவேற்காடு, மாதிரவேட்டில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரிக்கெனெ விடுதி உள்ளது. கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற 19 வயது மாணவி, 2-ம் ஆண்டு நர்சிங் பயின்று வந்துள்ளார். நேற்று மதிய நேரத்தில் சாப்பிட சுமதி தோழிகளோடு விடுதிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து தனது அறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால், சந்தேகமடைந்த தோழிகள் அறைக்கு சென்று பார்த்தபோது சுமதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவே, நிர்வாகத்தினர் கீழ்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுமதியின் தற்கொலை செய்தியை அறிந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரி முன்பு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனை கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையும் சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டது.
மாணவி யாருடன் பேசி வந்தார்? என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சுமதி நண்பருடன் நெருங்கி பழகி வந்தது தெரியவந்த நிலையில், அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் காதல் பிரச்சனையால் மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.