திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
14 வயது சிறுமியின் மருத்துவ சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. வெளியான பதைபதைப்பு உண்மை..!
சென்னையில் உள்ள திருவொற்றியூர் நகரில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட, பெற்றோர் ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மருத்துவர்கள் திருவெற்றியூர் மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, திருவெற்றியூர் பகுதியில் வசித்து வரும் ராஜசேகரன் (வயது 48), சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. ராஜசேகரன் மவுண்ட் ரோடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உதவி தணிக்கை அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர், சிறுமியின் வீட்டருகே இருக்கும் உறவினரை அவ்வப்போது சந்தித்து சென்ற நிலையில், சிறுமியுடன் நட்பாக பழகுவது போல நடித்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், அவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பயந்துபோன சிறுமி பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறாமல் இருந்த நிலையில், கர்ப்பத்தால் துயர சம்பவம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராஜசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.