திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நண்பனை போதையில் கொலை செய்து உடலை 2 நாள் காவல்காத்த நட்பு : மதியிழந்து செய்த செயலால் சோகம்.!
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலத்துடன் இரண்டு நாட்கள் இருந்த நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சென்னையில் உள்ள திருவெற்றியூர் ஜெ.ஜெ நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரின் வீட்டிலேயே சுரேஷ் என்பவரும் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்க்கிறார்.
இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதுபானம் அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முருகன் சுரேஷை சுத்தியால் பின் மண்டையில் ஓங்கி அடித்து கொலை செய்தார்.
போதையில் இருந்தவர் அப்படியே உறங்கிவிட்ட நிலையில், மறுநாள் காலையில் நண்பன் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாத நிலையில், சடலத்துடன் 2 நாட்கள் பொழுதை தள்ளியவர் அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று சரணடைந்தார்.
இவர் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற காவல்துறையினர், சடலமாக இருந்த சுரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முருகனை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.