மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை கலாய்த்தவனை கதறவிட்ட 17 வயது காதலன்.. காதலனை சிதறவிட்டு, நடுரோட்டில் சம்பவம் செய்த சொந்தங்கள்.!
தனது காதலியை கலாய்த்த நபரை காதலன் வெட்ட, வெட்டுவாங்கிய நபரின் உறவினர்கள் பெண்ணின் காதலனை பழிவாங்க வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, திலகர் நகர் சுனாமி குடியிருப்பை சார்ந்தவர் சீனா என்ற சீனிவாசன் (வயது 17). நேற்று மதியம் 2 மணியளவில் சீனிவாசன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஆட்டோவில் வந்துகொண்டு இருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், ஆட்டோவை வழிமறித்து சீனிவாசனை இறக்கி தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.
கத்தி, அரிவாள் முனையில் கைதட்டப்பட்டு அழைத்து செல்லப்பட்ட சீனிவாசன், உயிர் பயத்தில் புதுவண்ணாரப்பேட்டை மாதாகோவில் அருகே செல்கையில் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை விடாத கும்பல் துரத்தி சென்று சாலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர், சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விசாரணையில், சீனிவாசன் தனது காதலியை கிண்டல் செய்ததாக கூறி, அதே பகுதியை சார்ந்த பசுபதி (வயது 18) என்பவரை சீனிவாசன் வெட்டி இருக்கிறார்.
இதனால் படுகாயமடைந்த பசுபதி சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் பொருட்டு ஆத்திரத்தில் இருந்த பசுபதியின் உறவினர்கள் 5 பேர் சீனிவாசனை கொலை செய்தது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.