மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சாவை டோர் டெலிவரி செய்த தம்பதி அதிரடி கைது.. விசாரணையில் பகீர் தகவல்.!
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, இளைய முதலி தெருவில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடியை நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, ஜோடியின் கைப்பையை சோதனை செய்கையில், பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது உறுதியானது. விசாரணையில், இருவரும் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தாமோதரன் நகர் தினகர ராஜா (வயது 27), அவரின் மனைவி பிரியா (வயது 26) என்பது உறுதியானது.
இவர்கள் இருவரும் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து வியாசர்பாடி, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் அம்பலமாது.
மேலும், வீட்டில் வந்து டோர் டெலிவரியும் செய்துள்ளனர். இருவரையும் கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். ஜோடியாக தம்பதி கஞ்சா கடத்தி விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.