மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"குடிகாரப்பெயலே உனக்கு சாப்பாடு கேடாடா?" - மனைவி ஆவேசம்.. காதல் மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்.!
கணவனின் மதுபழக்கத்தை கண்டித்த மனைவி கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் வசித்து வருபவர் தளபதி (வயது 52). இவர் மீனவராக இருந்து வரும் நிலையில், கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி சண்முகப்பிரியா (வயது 49). இவர்கள் இருவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
தம்பதிகளுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், மூத்த மகன் இளம்பாரதி கப்பலில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மகளுக்கு திருமணம் முடிந்து, இராயபுரத்தில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் அருண் வீட்டிற்கு வந்த போது, தாயார் கூச்சலிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, படுக்கை அறையில் தாயை தந்தை கத்தியால் குத்திக்கொண்டு இருப்பதை கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
மகனை கண்டதும் தந்தை அங்கிருந்து தப்பி செல்ல, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தாயாரை மீட்ட அருண் சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சண்முகப்பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர், சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த தளபதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 4 வருடமாக போதைக்கு அடிமையாகி இருந்த தளபதி, சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனைவி, மகன்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், காதல் மனைவியும் கணவரை பிரிந்து தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த 4 மாதமாக கணவருடன் சண்முகப்பிரியா குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் வந்த தளபதி, மனைவியை சாப்பாடு பரிமாற கூறியுள்ளார். மனைவி கணவனை பார்த்து, "வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வருகிறாய்.. உனக்கு சாப்பாடு கேடா?" என கேட்டுள்ளார்.
கேள்விக்கணைகளை தொடுத்தாலும் கணவனின் பசியை போக்கிவிட்டு சண்முக ப்ரியா உறங்க சென்ற நிலையில், போதையில் ஆத்திரத்தில் இருந்த தளபதி சாப்பிட்டுவிட்டு பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் மார்பில் சரமாரியாக குத்தி இருக்கிறார். வெளியே சென்ற மகன் எதற்ச்சையாக வீட்டிற்கு வந்துவிடவே, தாயாரின் அலறலை கேட்டு வீட்டிற்குள் வந்துள்ளார்.
இதன்பின்னர், தளபதி அங்கிருந்து தப்பி சென்றுவிட, மருத்துவமனையில் சண்முகப்பிரியாவின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுனாமி குடியிருப்பில் பதுங்கி இருந்த தளபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.