மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பச்ச மண்ணுடா அந்த குழந்தை.. பெண்ணின் இரண்டாவது கணவனால், 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள வானகரம் பகுதியை சார்ந்த பெண், தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். பெண்ணின் கணவர் கடந்த 2013 ஆம் வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, பெண்மணி மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் வருடம் கற்பக கனி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
கற்பக கனி திருமணத்திற்கு முன்னதாக கார் வரதட்சணையாக கேட்ட நிலையில், பெண்ணின் சார்பில் காரும் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், பெண்மணி தனது இரண்டு குழந்தையுடன், இரண்டாவது கணவரான கற்பக கனியுடன் வசித்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் கற்பக கனியின் நடவடிக்கை சரியில்லாமல் இருந்த நிலையில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரியவருகிறது. இந்த சூழலில், கற்பக கனி வீட்டிற்கு வராமல் மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும், மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த தகவல் குறித்து அறிந்த சிறுமியின் தாய், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கற்பக கனியின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் பெண்மணி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
13 வயது சிறுமியும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு, விஷயத்தை தெரியப்படுத்தி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் நல அதிகாரிகள் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு தாம்பரத்தில் பதுங்கியிருந்த கற்பக கனியை கைது செய்தனர்.