மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான காதலனை கடத்தி திருமணம் செய்ய வற்புறுத்திய முன்னாள் காதலி; மறக்க முடியாததால் இளம்பெண் குடும்பத்தோடு விபரீதம்.!
சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் பார்த்தீபன் (வயது 31). இவருக்கும், மென்பொறியாளர் பிரியா என்ற வரனுக்கும் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்தது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி பார்த்தீபன் வேலைக்கு செல்கிறேன் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
அச்சமயம் காரில் வந்த கோம்பலொன்று பார்த்தீபனை காதி சென்றுள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன பார்த்தீபனின் தாயார் ஆஷா பிந்து, மகனை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், அவரை மோதி கார் அதிவேகமாக புறப்பட்டு சென்றது.
காயமடைந்த ஆஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். சம்பவம் தொடர்பாக பார்த்தீபனின் மனைவி பிரியா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி, பார்த்தீபனின் செல்போன் நம்பர் ஆகியவற்றை வைத்து முன்னெடுக்கபட்டப்பட்டு, காஞ்சிபுரத்தில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பகீர் தகவல் அம்பலமானது.
அதாவது, பார்த்தீபனின் முன்னாள் காதலி சௌந்தர்யா தலைமையிலான கும்பல் பார்த்தீபனை கடத்தியது தெரியவந்தது. ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை கல்லூரியின் போதே பார்த்தீபன் காதலித்து வந்துள்ளார். இருவரும் 7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து இருக்கின்றனர்.
பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்த்தீபனின் பெற்றோர் சௌந்தர்யாவை மறந்துவிட கூறியுள்ளனர். இருவரும் ஏப்ரல் மாதம் சுமூகமாக பேசி பிரிந்தும் இருக்கின்றனர். இதனால் ஜூலை மாதம் பிரியாவை பார்த்தீபன் திருமணம் செய்திருக்கிறார்.
சௌந்தர்யாவோ தனது காதலை மறக்க இயலாமல், வேறொருவரையும் திருமணம் செய்ய மனமின்றி தாயிடம் அழுது புலம்பியுள்ளார். இதற்கிடையில் தான் பார்த்தீபனை தனது தாயார் உமா (வயது 50), துணை இராணுவ வீரரான மாமா மகன் ரமேஷ் (வயது 39), நங்கநல்லூர் சித்தப்பா சிவகுமார் (வயது 48) ஆகியோருடன் சேர்ந்து காரில் கடத்தியுள்ளார்.
கடத்தியவரை காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்ய வற்புறுத்த, சௌந்தர்யாவின் உறவினர்கள் சரமாரி தாக்குதலும் நடத்தியுள்ளனர். பின் காவல் துறையினர் செல்போன் சிக்னல் வைத்து அனைவரையும் கைது செய்துள்ளனர்.