மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபார்ட்மெண்டில் பயங்கரம்.. பிரபல சினிமா தயாரிப்பாளர் சினிமா பாணியில் கொடூர கொலை... கூவத்தில் உடல் வீச்சு.. திரையுலகமே அதிர்ச்சி.!
விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடல் கூவத்தில் வீசிச்சென்ற நிலையில், மர்ம நபர்களுக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் சின்மயா நகர் கூவம் ஆற்றுப்பகுதியில் கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் ஆணின் பிணம் கிடந்துள்ளது. துப்புரவு பணியாளர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிளாஸ்டிக் பையை அவிழ்த்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது, பைக்குள் 65 வயதுள்ள நபர் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடலை கூவத்தில் வீசி சென்றதும் அம்பலமானது.
விசாரணையில், சென்னை ஆதம்பாக்கத்தை சார்ந்தவர் தந்தையை காணவில்லை என்று புகார் அளிக்கவே, கொலை செய்யப்பட்டு இருந்தவர் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் (வயது 65) என்பது உறுதியானது. இவர் கட்டுமான தொழில் செய்து வந்தது மட்டுமல்லாது, திரைப்பட பைனான்சியராகவும் இருந்து வந்துள்ளார். ராம்கி நடிப்பில் 2 படங்களை தயாரித்துவிட்டு பைனான்ஸ் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளார்.
இவருக்கு பாக்கியம்மாள் (வயது 60) என்ற மனைவியும், கார்த்திகேயன் (வயது 40), கௌசிக் (வயது 36) என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினத்தில் காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பாஸ்கரன், திருமண நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக புறப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் மகன் தந்தையை தேடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உறவினர்களும் பாஸ்கரனை தேடி வந்துள்ளனர்.
பாஸ்கரனின் கார் அவர் உயிரிழந்து இருந்த இடத்திற்கு 2 கி.மீ தொலைவில் கண்டறியப்பட்டது. அந்த வீட்டில் வசித்து வந்த கணேசன் என்ற நபர், வீட்டின் கதவை அவசரகதியில் பூட்டிவிட்டு வெளியேறியுள்ளார். மர்ம நபர்கள் பாஸ்கரனை காரில் கடத்திச்சென்று அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதன்பின், அவரின் உடலை கூவம் ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர்.
மேலும், பாஸ்கரனின் ஏ.டி.எம் காரில் இருந்து இலச்சக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்கரன் இறுதியாக யாரிடம் பேசினார்? அவரை கடத்தி சென்றது எந்த கும்பல்? எதற்காக கடத்தி சென்று கொலை செய்தார்கள்? என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.