மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் இல்லாத பெண்கள் டார்கெட்.. வாட்ஸப்பில் மர்ம ஆசாமிகள் செய்த கேவலமான செயல்.. அதிர்ந்துபோன பெண்மணி.!
துணையின்றி வாழும் பெண்களை குறிவைத்து கைவரிசை காண்பித்த மர்ம கும்பல் கைது செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள வடபழனியை சேர்ந்த பெண்மணியின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், பெண்ணிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். வாட்ஸப்பிலும் ஆபாச படங்கள், விடியோக்கள் போன்றவற்றை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சேலத்தை சேர்ந்த மணிகண்டன், சென்னை தியாகராஜன் நகரை சேர்ந்த மதியழகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு கணவரை இழந்து அல்லது துணை இல்லாமல் தனிமையில் வாழும் இளம்பெண்களை குறிவைத்து ஆபாச வலையில் வீழ்த்த திட்டமிட்டு செயல்பட்டது அம்பலமானது. இருவரும் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.