மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்குடன் சிக்கன் ரைஸ் சாப்பிட 21 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம்; நண்பனின் பர்த்டேவில் மீளாத்துயரை பரிசாக கொடுத்த பரிதாபம்.!
நண்பனின் பிறந்தநாள் விழாவில் மதுபானம் அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் மாரடைப்பால் மரணித்த துயரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 21). சம்பவத்தன்று இவரின் நண்பருக்கு பிறந்தநாள் விழா வந்துள்ளது. இதனையடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ள்ளது.
அப்போது, மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்த மகா விஷ்ணு, குடித்துவிட்டு சிக்கன் ரைஸை நன்றாக சாப்பிட்டு உறங்கியுள்ளார். பின்னர், காலையில் அவரை எழுப்பியபோது விழிப்பு இல்லை.
இதனால் பதறிப்போன நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் நள்ளிரவு நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிய நண்பர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். மேலும், அவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.
மகாவிஷ்ணுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், வியாசர்பாடி காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றுள்ள இளைஞர்களிடையே போதைப்பொருள் உபயோகமும், அதற்காக சைடிஸ் என்ற பெயரில் தரமற்ற பொருட்களால் தயார் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதும் வாடிக்கையாகியுள்ளது. அவை போதைப்பொருளை போல உங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மது & புகைப்பழக்கம் உடல்நலத்தை சீரழிக்கும், உயிரை குடிக்கும்...