53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண் வன்புணர்வு.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
சென்னை அண்ணா நகரை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், கணவனை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். கணினி சேவை மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் அவர் தனது சக ஊழியரான சத்தியஜித், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வலையில் விழுந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு இறுதியில் தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அந்தப் பெண்ணை கோயம்பேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார் சத்தியஜித். அப்போது அந்தப் பெண் அருந்திய குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் படமாக்கியுள்ளார். பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி அச்சுறுத்தி, அந்தப் பெண்ணை தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், சத்தியஜித்தின் மீது பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.