சென்னையில் பிராய்லர் கோழி விலை கிடுகிடுவென உயர்வு; சோகத்தில் அசைவ பிரியர்கள்.!



Chicken Price High In Chennai 

 

கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் இரண்டு வாரங்கள் வரை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் இறைச்சி கோழிகள் மற்றும் முட்டை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. 

உலகளவில் முட்டை மற்றும் இறைச்சி கோழிகளை ஏற்றுமதி செய்து வரும் நாமக்கல்லில் வெப்பம் கொழுத்தியெடுத்ததால், உற்பத்தி குறைந்து முட்டை மற்றும் கறிக்கோழி விலை என்பது கிடுகிடுவென உயர்ந்து வந்தது. 

இதையும் படிங்க: 17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த 70 வயது கிழவன்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!

முட்டை விலையை தொடர்ந்து கோழி விலையும் உயர்வு

அந்த வகையில், கடந்த வாரம் வரை ரூ.240 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழி இறைச்சி விலையானது தற்போது சென்னையில் கிடுகிடுவென உயர்ந்து கிலோவுக்கு ரூ.320 முதல் ரூ.380 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த தகவல் சென்னையில் உள்ள அசைவ பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கறிக்கோழி விலை உயர்வு உணவகத்தில் கோழி இறைச்சி சார்ந்த உணவு விலைகளை உயர்த்தலாம் அல்லது அளவை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குடும்ப பிரச்சனையில் நடந்த கொடூரம்; வீடுபுகுந்து அரங்கேறிய படுகொலை சம்பவம்.!