மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BREAKING : தேவாரம் பாடிய சிவனடியார்கள் 40 பேர் கைது.! சிதம்பரத்தில் பரபரப்பு.!
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தேவாரம் பாடிய சிவனடியார்கள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாகவே சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கும், சிவனடியார்களுக்கும் பிரச்சனைகள் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சேலம் சத்யபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் பலரும் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையின் மீது ஏறி தேவாரம், திருவாசகம், சிவபுராணம் உள்ளிட்டவற்றை பாடி சங்கு ஊதினார்கள்.
அப்போது சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் சிவனடியார்களை அங்கிருந்து வெளியில் அழைத்துச் சென்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் 40 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.