மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...!! ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்...!!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உட்பட மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி, 288 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவிற்காக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.