மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு ரஷ்யாவில் நேர்ந்த துயரம்! மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்!
மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு, சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் ஆகிய நான்கு இளைஞர்கள் ரஷ்யாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தங்கி மருத்துவம் படித்துவந்தனர்.
இவர்கள் நான்கு பேரும் கடந்த சனிக்கிழமை மாலை அங்குள்ள நதிக்கரைக்கு விளையாடுவதற்கு சென்றுள்ளனர். அப்போது மனோஜ் ஆற்று நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது, அவரை காப்பாற்ற ஸ்டீபன் முயற்சித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ராமு மற்றும் முகமது ஆசிக் இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர் அவர்களும் ஆற்றில் மூழ்கி நான்கு பேருமே நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து 4 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது. 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சக மாணவனை காப்பாற்ற முயன்று 4 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் உயிரிழந்த 4 மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.