மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆதாரத்துடன் காத்திருக்கும் வைரமுத்து வெளியிட்ட வீடியோ..! "நான் நல்லவனா கெட்டவனா என நீதிமன்றம் சொல்லட்டும்"
பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த புகார் ஆனது திரையுலகத்திலும் இந்திய அளவிலும் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
ட்விட்டரில் #MeToo என்ற ஹாஸ் டேக் மூலம் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பற்றி வெளியிட்டு வருகின்றனர். இதில் திரைத்துறை, அரசியல், விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். இந்த இயக்கமானது உலக அளவில் தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்மயி தன்மீது வெளியிட்ட புகாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து இவை அனைத்தும் பொய்யானவை என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சின்மயி இவை அனைத்தும் உண்மையே என்னால் எங்கு கேட்டாலும் நிரூபிக்க முடியும் என பல்வேறு வாதங்களை முன் நிறுத்தினார்.
இந்நிலையில், என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் முழுக்க முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து மீண்டும் வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
"என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுக்க முழுக்கப் பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை. அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் தாராளமாக என் மீது வழக்குத் தொடரலாம். நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களுடனும், ஆழ்ந்த அறிவுள்ளோரிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தேன். தகுந்த ஆதாரங்களைத் தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.
இனி யாரும் நான் நல்லவனா கெட்டவனா என்று கூற வேண்டியதில்லை. நீதிமன்றம் கூறட்டும். நீதிக்குத் தலைவணங்குகிறேன். நன்றி." என அவர் தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள சின்மயி ''வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
Mr. Vairamuthu should take a lie detector test.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 14, 2018
Enough said.