ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... தற்கொலைக்கான காரணம் என்ன?..! போலீசார் தீவிர விசாரணை..!
பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தில்லையில், அரசு பொதுத்தேர்வு பிளஸ் 2 வினாத்தாள் வைத்திருக்கும் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு இன்று அதிகாலையளவில் பெரியசாமி தற்கொலை செய்துள்ளார்.
இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.