கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஆண்மைக்குறைவுக்கு நாட்டுவைத்தியம் பாக்குறேன்னு, ஆண்களிடம் அத்துமீறல்.! 2 கொலை.. கற்ப்பழிப்பு.. பகீர் சம்பவம்.!
சோழபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற நபர் கடந்த 13ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அசோக் ஆண்மை குறைவு கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.
அசோக் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் சோழபுரத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கேசவமூர்த்தியிடம் மேற்கொண்ட கிடுக்கு பிடி விசாரணையில் அவர் அசோக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து போலீசார் பெற்ற வாக்குமூலத்தின் மூலம், "கேசவமூர்த்தி ஒரு ஓரினச்சேர்க்கையாளர், அவர் நாட்டு வைத்தியர் என்பதால் அவரிடம் ஆண்மை குறைவு மற்றும் பாலியல் வியாதிகள் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை எடுக்க பலரும் வருவார்கள்.
ஆண்மை குறைவுக்காக சிகிச்சை வருப்பவர்களிடம் கேசவமூர்த்தி ஓரின சேர்க்கை உறவு கொண்டுள்ளார். உறவுக்கு மறுப்பவர்களுக்கு ஆண்மை குறைவு மருந்து என்று கூறி போதை மருந்துகளை கொடுத்து அவர்களை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.இது போல அசோக்கிற்க்கும் போதை மருந்தை கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் கேசவமூர்த்தி. இதில் அசோக் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சில பாகங்களை கேசவமூர்த்தி சாப்பிட்டும், மீதமுள்ள பாகங்களை வீட்டிற்கு பின்புறம் புதைத்தும் வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் கும்பகோணத்தை சேர்ந்த முகமது அனாஸ் என்ற இளைஞருடன் இவர் உறவில் இருந்து வந்துள்ளார். அந்த இளைஞர் திடீரென தனக்கு திருமணம் நடக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
காதலர்கள் போல பழகிவிட்டு தனக்கு துரோகம் செய்கிறான் என்று நினைத்த கேசவமூர்த்தி முகமது அனாஸை கடைசியாக பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்து அவருக்கு போதை மருந்து கொடுத்து அவருடன் உடலுறவு கொண்டு கொலை செய்து அவரது வீட்டிலேயே புதைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2021-ல் போலீசில் முகமது அனாதை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் பல கொலைகள் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து கேசவ மூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.