தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
11 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையை திறந்து வைத்த தமிழக முதல்வர்! உச்சகட்ட மகிழ்ச்சியில் விவசாயிகள்!
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் அதற்க்கு பின்னர் போதிய நீர் இல்லாத காரணத்தால் ஜூன் 12ம் தேதி என்ற குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 2020 இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக தண்ணீர் திறக்க வேண்டிய தேதி ஜூன் 12 ஆம் திறந்தால், ஜனவரி 28 வரை 231 நாட்களுக்கு 300 டிஎம்சி அளவுக்கு நீர் பயணிக்கும்.
இந்தநிலையில், இன்று தமிழக முதல்வர் மேட்டூர் அணையின் 8 கண் மதகு பகுதியில் மலர் தூவி அணையை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். நீண்ட வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.