50 நாட்களை கடந்த ஊரடங்கு! தொழில் நிறுவனங்களுடன் இன்று மாலை முதல்வர் எடப்பாடி ஆலோசனை.!



CM today evening talk to all industries people

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே போவதால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் மூடியே இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று மாலை தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அதாவது இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சியின் மூலம் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை செயலாளர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Industrial people

மேலும் அந்த கூட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் தொழில் நிறுவனங்களில் ஏற்ப்பட்ட நஷ்டம் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் பேசப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.