மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவையை அதிரவைத்த கார் குண்டுவெடிப்பு விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்.!
தமிழகத்தை அதிரவைத்த 2022 கோவை கார் குண்டு வெடிப்பில், உயிரிழந்த முபீன் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2022 அக். 23ம் தேதி அதிகாலை கோயம்புத்தூரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் வெடித்து விபத்திற்குள்ளானது. காரில் பயணம் செய்த உக்கடம் பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபீன் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் முபீன் பயங்கவாதிகளுடன் தொடர்பில் இருந்தது அம்பலமானது.
விசாரணைக்கு பின்னர் முகமது அசாருதீன், அப்சர்க்கான், முகமது ரியாஸ், டல்கா, இஸ்மாயில், நவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத சதிச்செயல் என்ற பெயரில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி கூடுதலாக 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் மேற்கூறிய 6 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இவற்றின் குற்றப்பத்திரிகை நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கோவையில் நடைபெற்றது சிலிண்டர் வெடிப்பு அல்ல; ஐ.இ.டி எனப்படும் அதிபயங்கர குண்டு வெடிப்பு. உயிரிழந்த நபர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பேச்சுக்களை விரும்பி கேட்டுள்ளார்.
அவர் தலைமையில் கோவை உட்பட பல தமிழக பகுதிகளில் தாக்குதல் நடத்த மேற்கூறியவர்கள் குன்னூர், சத்தியமங்கலத்தில் சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளனர். முபீனின் தலைமையில் பல்வேறு சதிச்செயலுக்கு திட்டமிட்டு இருந்துள்ளனர் என்ற விபரமானது அம்பலமாகியுள்ளது.