கோவையை மையப்படுத்தி வானில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகிறதா? - பதறவைக்கும் தகவலை கூறும் நபர்.. நிலவரம் என்ன?..!



Coimbatore Chem Trails Issue Raise up by Arunkanth 

வானில் ரசாயனங்கள் தெளிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் கூறப்பட்டுள்ளது.

கோவை மக்களவை தொகுதியின் வேட்பாளர், அரசியல் கருத்துக்கள் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்டவர் அருண் காந்த். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், நேற்று செம் ட்ரயல்ஸ் (Chem Trails) எனப்படும் பதிவு ஒன்றை இட்டிருந்தார். 

அந்த பதிவில், அமெரிக்காவில் உள்ள டென்னிஸி மாகாணத்தில் தடை செய்யப்பட்ட ரசாயன விதைப்பை வானில் விமானங்கள் உதவியுடன் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இது மத்திய அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெறாது. 

இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் இருந்த வாலிபர் திடீர் தற்கொலை; லாட்ஜ் அறையில் பகீர் சம்பவம்.!

ரசாயனங்கள் தூவப்படுவதாக வீடியோ

இவ்வாறான செயல்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் கண்கள் பாதிக்கப்படுகிறது. விமானங்கள் உதவியுடன் நடுவானில் தூவப்படும் ரசாயனங்களுக்கு காரணம் என்ன? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

உண்மை புரியாததால் குழப்பம்

அந்த வீடியோவில், விமானம் பறக்கும்போது நடுவானில் அதன் எஞ்சின் பகுதியில் இருந்து புகைகள் சில தூரம் வெளியாகி பின் மறைகிறது. இவை இயற்கையாக காற்றில் கலந்துவிடும். இந்நிகழ்வை ரசாயன வேதிப்பொருள் தூவல் என அருண் வருணித்து இருக்கிறார். 

இதுதொடர்பான உண்மை நிலவரம் தற்போது வரை தெரியவராத நிலையில், அவர் ஆட்சியாளர்களிடம் தனது கேள்வியை முன்வைத்து இருக்கிறார். ஒருசிலர் அவரின் கருத்து பக்கத்திலேயே அது எஞ்சினில் இருந்து வெளியேறும் புகை என கூறியுள்ளனர். 

அதிகாரிகள் விளக்கம் அளிக்க கோரிக்கை

ஆனால், அவர்களிடம் அருண் தனது கேள்விகள் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கட்டும் என்ற விபரத்தை கூறுகிறார். இதனால் உண்மையில் அங்கு நடப்பது என்ன? ஒருவேளை ரசாயனம் தான் தூவப்படுகிறதா? அல்லது சாதாரண நிகழ்வை அசாதாரணமாக எண்ணி அவர் செயல்படுகிறாரா? என்பது தெரியவில்லை. 

இதையும் படிங்க: நண்பனின் மனைவியை அபகரிக்க நினைத்த தோழன்.. வேலை வாங்கிக்கொடுப்பதாக பச்சை துரோகம்.!