"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சல்லாப ஆண்கள் டார்கெட்.. பெண்களின் கவர்ச்சி போட்டோ காட்டி, சொகுசாக வாழ்ந்த 9 பேர் கும்பல் கைது.! லொகாண்டோ ஆப் அடிமைகளே உஷார்.!
கோயம்புத்தூரை சேர்ந்த 43 வயது நபர், ஆயுர்வேத மசாஜ் பெற விரும்பி, இணையத்தில் அதுதொடர்பாக தேடி இருக்கிறார். செயலி ஒன்றில் ஆயுர்வதே மசாஜ் குறித்து பார்த்த விளம்பரத்தில் வழங்கப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் பேசிய பெண்மணி, இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களை காண்பித்து விபரம் கேட்டு ரூ.8.25 இலட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆயுர்வேத மசாஜ் தரப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர் கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஹரிப்ரசாத் (வயது 31), அவரின் கூட்டாளிகள் மகேந்திரன், சக்திவேல் (வயது 26), சரவண மூர்த்தி (வயது 23), அருண் குமார் (வயது 24), சக்திவேல் (வயது 29), ஜெயபாரதி (வயது 22), மகேந்திரன் (வயது 30), கோகுல் (வயது 31) ஆகியோர் மோசடி செய்தது உறுதியானது.
பெங்களூரில் பதுங்கியிருந்த ஒன்பது பேரையும் அதிரடியாக கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இக்கும்பலின் தலைவராக இருந்து வந்த ஹரி பிரசாத், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோரை பயன்படுத்தி மோசடிக்காக லோகாண்டோ செயலியை பார்த்துள்ளனர்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள கவர்ச்சி படங்களை வைத்து, அதே பாணியில் பணம் சம்பாதிக்கலாம் என எண்ணியுள்ளனர். லோகான்டோவில் விருப்பம் தெரிவிக்கும் நபர்களின் செல்போன் நம்பருக்கு தொடர்புகொண்டு, மசாஜ், கால் கேர்ள், விபச்சாரம் போன்ற பல்வேறு செயல்களை பேக்கேஜிங் முறையில் செய்து தருவதாக ஆசையாக பேசி வலைவிரித்து இருக்கின்றனர்.
வாடிக்கையாளர் இடத்தை தேர்வு செய்ததும், பெண்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என புகைப்படத்தையும் அனுப்பி இருக்கின்றனர். இதனை பார்த்து சல்லாபம் கொள்ளும் இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை குறிவைத்து பணமோசடி செய்துள்ளனர். ஆசையாக சென்று பலரும் ஏமாற்றம் அடைந்தாலும், அவமானம் கருதி பலரும் புகார் அளிக்கவில்லை.
இதனை தனக்கு சாதகமாக்கிய கும்பல், மும்பை, கோவை, பெங்களூர் நகரங்களில் தங்கியிருந்து இலட்சங்களில் மோசடி செய்துள்ளது. இறுதியாக கோவையை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி 9 பேர் கும்பலையும் கைது செய்துள்ளனர்.