மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மொத்தமாக சுத்தம் செய்யப்பட்ட மலையடிவாரம்.. யானைகளுக்கு பேராபத்து - பகீர் வீடியோ வைரல்.!
பூலாம்பட்டி வனச்சரகத்தில் யானைகளின் வழித்தடத்தில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பகீர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி நரசிபுரம் வனச்சரகத்தில் உள்ள மலையடிவாரத்தின் மரங்கள் முக்கிய புள்ளியின் உத்தரவு காரணமாக வெட்டிசாய்க்கப்பட்டதாக தெரியவருகிறது. மரங்கள் அனைத்தும் வெட்டி சாய்க்கப்பட்டு நிலம் சமன் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பான காணொளி காட்சிப்பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்த வீடியோவில் பேசியுள்ள சிவா என்பவர், "யானைகளின் வழித்தடத்தில் உள்ள காடுகளை முக்கிய புள்ளி வெட்டிச்சாய்த்துள்ளார். சரியாக மலைக்கு அடிவாரத்தில் இந்நிகழ்வு நடந்துள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது யானைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் விஷயம்" என்று தெரிவிக்கிறார்.
விடீயோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.