கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
2 மனைவிகள், அம்மா, தம்பியோடு குடும்பமாக மகளிர் இலவச பேருந்துகளில் நகை திருட்டு.. 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம்போட்டு உல்லாசம்; திருட்டு குடும்பத்தின் பரபரப்பு வாக்குமூலம்.!
கூட்ட நெரிசலோடு பயணிக்கும் மகளிர் பேருந்தை குறிவைத்து 2 பொண்டாட்டி, 1 அம்மாவோடு குடும்பமாக திருட்டு தொழிலில் இறங்கிய திருடன் கோவையில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளான். திரையில் கேடி குடும்பம் என்பதை பார்த்து பழகிய நமக்கு, நிஜத்தில் அப்படியொரு ஜோடி சிக்கியுள்ளது அதிர்ச்சியைத்தான் தருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், நரசிம்மர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டு இருந்த 5 பேரிடம் தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த சுப்பையா மனைவி பார்வதி (வயது 67), பார்வதியின் மகன்கள் கண்ணையா (வயது 30), திவாகர் (வயது 26), திவாகரன் இரண்டு மனைவிகள் கீதா (வயது 24),முத்தம்மா (வயது 23) என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஒரே குடும்ப உறுப்பினர்களான இவர்கள் ஐவரும் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை திருடுதல், பர்ஸ்களில் உள்ள பணங்களை திருடுதல் என திருட்டு தொழில் செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர்கள் திருடி வைத்திருந்த 40 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் கொள்ளையன் திவாகர் அளித்த வாக்குமூலத்தில், "எங்களது ஊர் மதுரை. நாங்கள் திருட செல்லும் இடத்திற்கு குடும்பமாக சென்று திருடுவதே வழக்கம். தொடக்கத்தில் நான், எனது அம்மா, தம்பி ஆகியோர் திருட செல்வோம். அப்போது, எங்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முத்தம்மாவோடு பழக்கம் ஏற்பட, அவர் தனது அக்காவோடு திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
நானும் - முத்தம்மாவும் நட்புடன் பழவி வந்தாலும், பின்னாளில் அவை காதலாக மாற ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்தோம். இதனால் அவ்வப்போது முத்தம்மாவின் வீட்டிற்கு சென்று வருவேன். அப்போது, முத்தம்மாவின் அக்கா கீதாவுடனும் எனக்கு பழக்கம் ஏற்பட, அவரிடமும் காதலை தெரிவித்தேன். அவர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, சிறிது நாட்களில் இக்காதல் விவகாரம் முத்தம்மாவுக்கு தெரியவந்தது.
என்னை முத்தம்மா, கீதா ஆகியோரால் விட்டுக்கொடுக்க இயலவில்லை. எனக்கும் அவர்களை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை. இதனால் இருவரையும் திருமணம் செய்ய முடிவெடுத்து, நாம் திருமணம் செய்து அக்கா-தங்கை உறவை விட்டு பிரியாமலும், திருட்டு தொழிலை மேலும் பெருக்கி சந்தோசமாக ஊர் சுற்றலாம் என கூறினேன். அதற்கு இருவரும் பூரண சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து, நான் இருவரையும் கரம்பிடித்தேன்.
இவர்களோடு நான் வாழ்வதற்கு மதுரையில் 2 அறைகள் இருக்கும் வீட்டை வாங்கி குடும்பம் நடத்த தொடங்கினேன். சில நாட்களில் மனைவிகள், அம்மா, தம்பி ஆகியோரிடம் கலந்து பேசி குடும்பமாக திருட தொடங்கினோம். தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே பயணம் செய்வோம். கூட்டம் அதிகம் உள்ள பேருந்து, மகளிருக்கான இலவச பேருந்துகளில் எப்போதும் மக்கள் நெரிசல் இருக்கும் என்பதால், அவை தான் எங்களின் டார்கெட்.
என் 2 மனைவிகள், அம்மா சேர்ந்து பெண்களின் நகைகளை நைசாக அறுத்து எடுத்த கொண்டு வருவார்கள். மாதம் ஒரு ஊரில் நகையை கொள்ளையடித்து வரும் பணத்தை எடுத்து நட்சத்திர விடுதியில் தங்கி உல்லாசமாக இருப்போம், ஊரை சுற்றிவிட்டு மதுரைக்கு வருவோம். பின்னர் மீண்டும் எங்களின் வேலையை சில நாட்கள் கழித்து தொடங்குவோம். கோவையில் அப்படி திருடிவிட்டு வரும்போதுதான் குடும்பத்துடன் சிக்கிக்கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.