15 பேர் கும்பல் பல்லாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் சோகம்.. கோவையில் நடப்பது என்ன?.. கிலோக்கணக்கில் கஞ்சா மிட்டாய்..!



Coimbatore Ganja Gang Police Investigation

கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மிட்டாய் விற்பனை செய்த கும்பல் தொடர்பான தகவல் அம்பலமாகி கோயம்புத்தூர் நகரையே அதிரவைத்துள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமீபமாகவே கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்த வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரத்னபுரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அதிகாரிகள் சங்கனூர் சாலை கண்ணப்ப நகரில் சோதனையில் ஈடுபட்ட சமயத்தில், முதியவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுகொண்டு இருந்தார். முதியவரிடம் சாக்கு மூட்டையும் இருந்த நிலையில், அவரிடம் சென்று அதிகாரிகள் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் சாக்கு மூட்டையை அவிழ்த்து சோதனை செய்தனர். 

அப்போது, சாக்கு மூட்டைக்குள் 20 கிலோ கஞ்சா சாக்லேட் கண்டறியப்பட்டது. விசாரணையில், கோயம்புத்தூர் அறிவொளி நகரில் வசித்து வரும் பாலாஜி (வயது 56), அண்ணா மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தனது தொழிலில் சரியான வருவாய் கிடைக்கவில்லை என்று எண்ணிய பாலாஜி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையும் செய்துள்ளார். 

Coimbatore

பாலாஜிக்கு ஸ்டைல் சுரேஷ் என்பவன் கஞ்சா சப்ளையராக செயல்பட்டு வரும் சமயத்தில், அவன் கஞ்சா கும்பலின் உள்ளூர் தலைவனாகவும் செய்யப்பட்டு வந்துள்ளன. இவனின் தலைமையில் 15 per கொண்ட கும்பலே செயல்பட்டு வந்துள்ளது. இவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகளவில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த கஞ்சா கும்பல் தலைமறைவாகியுள்ள நிலையில், 15 பேருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.