ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பேக்கரியில் பெண் பலாத்கார முயற்சி.. கேக் வாங்க சென்று சோகம்.. கோவையில் பயங்கரம்..!
கேக் வாங்க சென்ற போது, யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட காமுகன், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சாய்பாபா காலனியில வசித்து வருபவர் ராஜ்குமார் இவர் ஒரு கூலித்தொழிலாளி. இந்த நிலையில், இவர் அதே பகுதியில் இருக்கும் ஐஸ்கிரீம் கடை ஒன்றில் பிறந்த நாள் கேக் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஒரு இளம்பெண் மட்டும் தனியாக இருந்த நிலையில், அவரிடம் பிறந்தநாள் கேக் கேட்டுள்ளார். இதனால் அவர் கேக் இருக்கும் இடத்திற்கு ராஜ்குமாரை அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட காமுகன், திடீரென பெண்ணை அணைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இதனால் பயந்துபோன இளம்பெண் சத்தம் போட்ட நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
அப்போது ராஜ்குமார் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதையடுத்து, அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.